பட்டமளிப்பு விழா

11.3.2018 அன்று MEGA INSTITUTE OF ACUPUNCTURE என்ற நிறுவனத்தில் அக்குபஞ்சர் சிகிச்சை முறையில் பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
திருவள்ளுர் மாவட்ட நீதிபதி முருகேசன் அவர்கள், குழந்தைகள் நல மருத்துவர் சரசா MBBS அவர்கள், காவல் துறை முன்னால் கண்காணிப்பாளர் மாணிக்கம் ஆகியோருடன் சேர்த்து சமூகநீதி முரசு ஆசிரியர் CMN சலீம் அவர்களுடன் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டனர். சான்றிதழ் பெற இருந்தவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது சிறப்பான செய்தி.
பெண்களுக்கு பரம்பரை பரம்பரையாக மூத்தோர் மூலம் வீடுகளில் கற்பித்துத் தரப்பட்ட
தமிழர் நிலத்தின் உணவு பழக்கம் கைவைத்தியம் வாழ்வியல் முறைகள் அனைத்தும் கடந்த 30 ஆண்டுகளாக திட்டமிட்டு இன்றைய கல்வி மற்றும் ஊடகங்களின் துணையோடு
மறக்கடிக்கப்பட்டுள்ளன. தேசிய இனங்களின் மரபுகளை சிதைப்பதில் முதலாளித்துவமும் பன்னாட்டு நிறுவனங்களும் கடந்த 100 ஆண்டுகளில் மிகப்பெரிய வெற்றி கண்டுள்ளன. அதிலிருந்து மீண்டு வர பெண் சமூகம் மருத்துவத்துறை கையிலெடுக்க வேண்டும் என்று CMN சலீம் பேசினார்.