செலவில்லா சித்த மருத்துவம்

Ayurvedic Medicine System59.நாயுருவி ;
மூலரோகங்களுக்கும், சிறிய வெட்டுக்காயங்களுக்கும் மருந்தாகும். நாயுருவியை (அரிசி) சோற்றுடன் போட்டு வேகவைத்தால் சோறு வேகாது. நாயுருவி இலை, வேலி பருத்தி இலை, தொட்டால் சுருங்கி இலை, இவற்றுடன் சிறிய அளவு சுண்ணாம்பு சேர்த்து அரைத்து வெட்டுக் காயங்களில் போட்டு வர ஆறாத ரணங்களும் ஆறிவிடும்.
60. ஓர் இதழ் தாமரை ;
புல் பூண்டுகளுடன் இது வளர்கிறது. இதன் இலையை நிழலில் காய வைத்து இடித்து சலித்து அத்துடன் நெய் சேர்த்து காலை - மாலை வேளைக்கு 1 டீஸ்பூன் பொடியை சேர்த்து கொடுத்து வர நீர்க் கடுப்பு எரிச்சல் குணமாகும். ஆண்மை உண்டாகும்.
61.கௌதும்பை ;
இது சிறு செடியாக காடுகளில், தோட்டங்களில் வளரும். இதன் பூக்கள் வெண்மை நிறத்தில் தலை கீழாக கவிழ்ந்து காணப்படும். பெண்கள் மேக வெள்ளை நோய்க்கு இத்துடன் பொடுதலை, வெள்ளருகு சம அளவு சேர்த்து நன்கு அரைத்து பாலுடன் காலை - மாலை சாப்பிட நோய் தீரும்.
62. பேய் குமட்டி அல்லது ஆற்றுதுமட்டி ;
இதன் சாற்றுடன் வேப்பெண்ணெய் கூட்டி காய்ச்சி எடுத்து தினம் 3 சொட்டுகள் காதில் இட்டு வர காது புழுக்கள் சாகும். சீழ் வடிதல் நின்று விடும். இதன் இலையை அரைத்து குழந்தைகளின் விலாப் பகுதியில் மேலால் இரவில் பூசி விட்டால் வயிற்றுக் கிருமிகள் மலத்துடன் செத்து வெளி வரும்.
63. எருக்கன் இலை ;
ஒரு வகை நீல நிறமான பூக்களையும், மற்றொரு வகை வெண்மை நிற பூக்களையும் பூக்கும். நன்கு சூடேற்றிய செங்கலில் இலைகளை வைத்து அதன் மேல் குதிகால்களை வைத்து எடுத்து வர 3 நாளைக்குள் குதிகால் வலி தீரும். இலைச் சாற்றுடன் மஞ்சளைப் பொடியாக்கி சேர்த்து கட்டிகளின் மேல் வைத்து கட்ட கட்டிகள் உடைந்து விடும். தேள் கொட்டிய இடத்தில் எருக்கன் பாலையும் அவுரிச் சாற்றையும் சேர்த்து தேய்க்க தேள் கடி உடன் நிவர்த்தியாகும். முள் தைத்த இடத்தில் எருக்கன் பாலை போட முள் வலி தீரும்.
64. சிகப்பு முள்ளங்கி ;
இலையை வெயிலில் காய வைத்து எரித்து சாம்பலாக்கி அச்சாம்பலுடன் விளக்கெண்ணெய் சேர்த்து மை போல் அரைத்து துணியில் தடவி பாலுண்ணிகளின் மேல் போட பால் உண்ணி உதிர்ந்து விடும்.
65. குன்னிமுத்து இலை ;
இந்த இலைச் சாற்றுடன் வெண்கொடி வேலி இலை சாறும் சேர்த்து உடம்பில் பூசிவர வெண்தொலி 40 தினத்தில் தேக நிறத்தில் வந்து விடும். குளிக்கும் போது சோப்பு உபயோகிக்காமல் சீயக்காய் உபயோகிக்கவும்.
66. ஊமத்தன் இலை ;
இதன் சாறு 5 அல்லது 6 சொட்டு 1 டீஸ் பூன் நல்லெண்ணெய்யுடன் சேர்த்து ஒரு தடவை மாத்திரம் கொடுக்க வெறி நாய்க்கடி விஷம் குணமாகும். அன்று மட்டும் உப்பு, புளி நீக்கி இச்சா பத்தியம் காக்கவும்.
67. ஆரக்கீரை ;
இது வயல் வெளிகளில் மிகுதியாகக் காணப்படும். ஒவ்வொரு கால்களிலும் நான்கு இலைகள் இருக்கும். ஒரு காலில் நாலு பந்தல் என்று கூறுவர். இதை நெய்யுடன் வதக்கி வாரம் இரு முறை 1 மண்டலம் சப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குணமாகும். நல்ல ருசி உள்ள கீரையாக வதக்கிச் சாப்பிடலாம்.
68. விஷ்ணு கிரந்தி ;
இது காடுகளிலும், ரோட்டு ஓரங்களிலும், தரிசு நிலங்களிலும் காணப்படும். சிறு செடியாக தரையோடு படர்ந்து கிடக்கும். நீல நிறத்தில் பூக்கள் இருக்கும். சொறி சிரங்கு உள்ளவருக்கு இந்த இலைகளை அரைத்து பூசி வர குணமாகும். இலையுடன் சம அளவு சீரகம், சோற்றுக் கற்றாழை, கருப்புக் கட்டி சேர்த்து அரைத்து தினம் இரவு பாலுடன் சாப்பிட்டு வர ஆண்மை சக்தி கிடைக்கும்.
69. ஆதாளை ;
இது ரோட்டோரங்களில் மிகுதியாக காணப்படும். இதில் பச்சை, கிகப்பு நிறங்கள் உண்டு. இரண்டிற்கும் குணம் ஒன்றுதான். இதன் குச்சியை எடுத்து வாய் முழுவதும் தேய்த்து வர வாய்ப்புண், ஈறு வீக்கம், பல் வலி குணமாகும்.
70. இம் பூரல் ;
இது காடுகளில் உள்ள தரிசு நிலங்களில் காணப்படும். இதன் சாற்றை 50 மில்லி அளவு குடித்து வர விக்கல், கோழை, ரத்த வாந்தி, கஷயம், காசம், இருமல் குணமாகும். இலைச் சாற்றை பாலுடன் சேர்த்து சாப்பிட மார்பு எரிச்சல் தீரும். இம் பூரலுக்கு இரத்தத்தை அடக்கும் சக்தி உண்டு.
71. ஆவாரை ;
இது தரிசு நிலங்களிலும், ரோட்டோரங்களிலும் காணப்படும். மஞ்சள் நிறத்தில் பூக்கள் அடர்த்தியாக இருக்கும். கொத்து கொத்தாக காய் காய்க்கும். “ஆவாரை பூத்திருக்கும் சாவாரை கண்டதுண்டோ” என்ற பாடல் வரியிலிருந்து இது மிகவும் முக்கியமான மருந்தாகும். ஆவாரை பஞ்சாங்கம் தயார் செய்து காலை – மாலை பாலுடன் அல்லது ஆறிய வெண்ணீருடன் வேளைக்கு 1 டீஸ்பூன் பொடியை சாப்பிட்டு வர சக்கரை நோய் குணமாகும். ஆவாரம் பூவையும், கடலை மாவையும் சேர்த்து அரைத்து தினமும் முகத்தில் பூசி இளம் வெண்ணீர் விட்டு கழுவி வர முகம் பாலீஷாக இருக்கும். இது உடல் சூட்டை தணிக்க வைக்கும்.
72. சதாப்பு ;
இது மலை ஓரங்களில் காணப்படும் மூலிகை வகையாகும். இதை குடிநீர் செய்து கொடுக்க சூதகசன்னி, வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், செரியாமை, மாந்தம் குணமாகும்.
73. சிவகரந்தை ;
இது அறுவடையான வயல்வெளிகளிலும், வெட்டுக் கிடங்குகளிலும் காணப்படும். இதில் கொட்ட கரந்தை என்ற ஒரு பிரிவும் உண்டு. இதன் இலைகளை நிழலில் உலர்த்தி, சூரணம் செய்து பசுவெண்ணெய்யுடன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் வாந்தி, அக்னி மாந்தம், விந்து நஷ்டம் குணமாகும்.