செலவில்லாத சித்த மருத்துவம்


ayurvedaஅன்பான வாசக நண்பர்களே! கடந்த இரண்டு மாதமாக குழந்தைகளுக்கு வரும் நோய் பற்றி எழுதி இருந்தேன். இந்த மாதம் அதன் தொடர்ச்சியாக எழுதுகிறேன். இந்த இலகுவான மருந்துகளை செய்முறையில் உபயோகித்து பயனடைய வேண்டுகிறேன்.
33. சிறுவர்களுக்கு அண்டி தள்ளினால்
நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் கடுக்காய் அல்லது மாசிக்காய் பொடியை தடவி வர சுருங்கும்.
34. குழந்தைகளுக்கு நீர்க் கடுப்பு உஷ்ணம் இருந்தால்
நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் பாதாம் பிசினை ஐந்து கிராம் வாங்கி பொடித்து மூன்று பங்கு வைத்து ஒரு பங்கை இரவு அரைக் கிளாஸ் நீரில் ஊறப்போட்டு காலையில் குழந்தைக்கு கொடுக்கவும். இப்படி மூன்று நாட்கள் கொடுக்க உஷ்ணம் போகும்.
35. குழந்தைகளுக்கு தலையில் புழு வெட்டு வந்தால்
நாட்டு மாதுளம் பழவிதை ஒரு பங்கு சாதாரண உப்பு நாலில் ஒரு பங்கு சேர்த்து நன்கு அரைத்து தினம் சிறிய அளவு நீர் சேர்த்து தடவி வர இருபது நாளில் முடி முளைக்கும்.
36. குழந்தைகளுக்கு தலையில் ஈறு பேன் இருந்தால் யாழ்ப்பாணம் புகையிலை ஐந்து கிராம் படிகாரம் ஐந்து கிராம் இரண்டையும் பொடியாக்கி ஒன்று சேர்த்து தலையில் சிறிதளவு தேய்த்து குளிப்பிக்கவும். ஈறு பேன் எல்லாம் ஒழிந்துவிடும்.
37. குழந்தைகளுக்கு ஜலதோஷம் இருந்தால்
முருங்கை இலை சாற்றுடன் சம அளவு தேன் சேர்த்து வேளைக்கு அரை சங்கு அளவு தினம் மூன்று வேளை கொடுக்க ஜலதோஷம் தீரும்.
38. குழந்தைகள் தொண்டைக் கட்டுக்கு
குப்பை மேனி இலை சாறும், சுண்ணாம்பையும் சேர்த்து குழைத்து தொண்டையின் வெளிப்பகுதியில் தடவ குணமாகும்.
39. விடாது விக்கல் வந்தால்
பழைய மாட்டுத் தோலை சுட்டு சாம்பலாக்கி அரை டீஸ்பூன் அளவு தேனுடன் கலந்து கொடுக்க விக்கல் நிற்கும்.
40. தலைப் பேன் நீங்க
மருதோன்றி பூவை தேங்காய் எண்ணெய்யில் சேர்த்துக் காய்ச்சி தலையில் தேய்க்க பேன்கள் செத்து விடும்.
41. குழந்தைகளுக்கு பேதியானால்
ஒரு சிறிய துண்டு வசம்பை நன்கு அரைத்து காய்ச்சிய பாலுடன் கொடுக்க ஒன்று இரண்டு வேளையில் பேதி நின்று விடும்.
42. ஆண் குழந்தைகளுக்கு விதை வீக்கம் இருந்தால்
நொச்சி இலை, வெள்ளைப் பூண்டு, அரிசி, களச்சிக்காய் இவைகளை முட்டை வெண்கரு இட்டு அரைத்துப் போட வீக்கம் வத்தி விடும்.
43. குழந்தைகளுக்கு தேமல் இருந்தால்
முற்றிய பூவரசன் காய், செவ்வரளி மொட்டு, மஞ்சள் இவைகளை நிழலில் உலர்த்தி இடித்து பொடியாக்கி தேவையான அளவு நீருடன் சேர்த்து மேலால் தேய்த்து வர மாறும்.
44. அக்கி தோன்றினால்
ஊமத்தை இலை சாற்றுடன் எருமை மோர் சேர்த்து தேய்த்து வர குணமாகும்.
45. குழந்தைகளுக்கு முடி உதிர்ந்தால்
நெல்லிக்காய் பவுடர், வெந்தயப் பவுடர் சேர்த்து அரைத்து தேய்த்து குளித்து வர முடி உதிர்வு நின்று விடும்.
46. குழந்தைகள் வயிறு பொருமலுக்கு
ஓமத்தையும், பெருங்காயத்தையும் சம அளவு எடுத்து அரைத்து வென்னீரில் கலந்து கொடுக்க பொருமல் ஓடிவிடும்.
47. திடீரென வாயிலும் மூக்கிலும் ரத்தம் வந்தால்
ஆடா தொடை இலையின் சாறும், தேனும் கலந்து சங்களவு கொடுக்க மூன்று வேளையில் நின்று விடும்.
48. வண்டு கடி, கானகபடியால் உடம்பில் தடிப்பு ஏற்பட்டால்
குப்பை மேனி இலை சாறு, அல்லது வேலிப் பருத்தி அல்லது ஆடு தின்னா பாளை அல்லது வெள்ளை சங்கு புஷ்ப இலை இவைகளில் எதாவது ஒன்று அல்லது எல்லாவற்றையும் சேர்த்து அரைத்துத் தேய்க்க குணமாகும்.
49. தீக்காயம் ஏற்பட்டால்
தேங்காய் எண்ணெய்யுடன் வெள்ளை மெழுகை சேர்த்து உருக்கி மேலால் போட்டு வர தீக்காயம் ஆறும்.
50. குழந்தைகளுக்கு வேர்வை அதிகமாக இருந்தால்
வெள்ளை சங்கு புஷ்ப இலைச் சாறு இஞ்சி சாறு தேன் மூன்றையும் சேர்த்து வேளைக்கு ஒரு சங்கு கொடுத்து வர நின்றுவிடும்.