மதுவில் தத்தளிக்கும் தமிழம்....

1இந்தியாவின் தன் நிகரில்லா மாநிலம் தமிழகம்… இது மதுவை விற்பனை செய்வதிலும் தமிழகம் இந்திய அளவில் முதலிடம் வகிக்கிறது. அரசிடம் மக்கள் வைக்கும் கோரிக்கைகள் எத்தனையோ கிடப்பில் போடப்படுகின்றன. ஆனால் மது வேண்டாம் என்று கேட்டு ஒரே ஒரு குடிகாரன் கூட கோரிக்கை வைக்காத நிலையில் அரசு தானாகவே மதுவை விற்பனையை செய்து

வருகிறது… நம் தங்கத் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடுகிறதோ? இல்லையோ ! மது ஆறு எல்லா இடங்களிலும் மடை திறந்த வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது… என்பது இன்றைய நிதர்சனம். தமிழகத்தில் காவிரி ஆற்றை விட அதிகமாக ஓடுகிறது மது ஆறுதான்… வீதியெங்கும் மதுபான கடைகள் நிமிர்ந்து நிற்கின்றன. அன்றாட மக்களின் அத்தியாவசியத் தேவையான தண்ணீருக்கு தட்டுப்பாடு, ஆனால் “மது”க்கு தட்டுப்பாடுமில்லை; கட்டுப்பாடுமில்லை. மக்களின் ஆரோக்கியமான தேவைகளுக்கு “ஆவின்” பால் கிடைப்பதில்லை தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் மதுபாட்டில்கள் தட்டுப்பட்ட இடங்களில் கட்டுப்பாடற்று கிடக்கிறது. ஆவின் பாலை விட “டாஸ்மாக்” உடல் நலத்திற்கு நல்லது என்று நினைக்கிறது போல தமிழக அரசு? ஆம் இந்தியாவின் பொதுப்பணித்துறை நிறுவனங்களின் ஒன்றாக தமிழகத்தின் டாஸ்மாக் இடம் பிடித்துள்ளது. தனியார் மூலமாக டாஸ்மாக் விற்பனையை நடத்திய அரசு 2003 – 2004 இல் அரசே நேரடி விற்பனையை தொடங்கியது. அன்று கிடைத்த ஆண்டு வருவாய் 3,500, 2011 – 2012 18.000 கோடி தற்போது கிடைக்கும் ஆண்டு வருவாய் 22,000 கோடிக்கு மேல் வந்து கொண்டிருக்கிறது. எந்தவொரு சரிவுமில்லாமல் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. என்பது மிகவும் சிந்திக்க வேண்டிய விஷயம் அதுமட்டுமில்லாமல் ஒரு பக்கம் அரசின் மது விற்பனையில் அபார சாதனை? மறுபக்கம் மதுவினால் ஏற்படும் அவலத்தை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வேதனையாக உள்ளது. ஆம் 15 ஆண்டுகளுக்கு முன்பு 28 வயதுக்கு மேற்பட்டோரிடம் இருந்த மதுப் பழக்கம் இன்று 13 வயது கூட நிரம்பாத சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மதுப்பழக்கம் பரவியிருக்கிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 10 கோடி பேர் போதைப் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.
    தமிழகத்தில் நடைபெற்ற குற்றநிகழ்வுகள் பெரும்பாலும் குடிபோதையில்தான் நடைபெறுகிறது. சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழகமும் இடம் வகிக்கிறது.
    கடந்த 2003 – 2013 வரையிலான 11 ஆண்டுகளில் சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,40,686 பேர் இது மரண விபத்து கணக்கு மட்டுமே இப்படியான உயிர் இழப்புகளின் உயர்வுக்குக் காரணம் சாலைகள், ஓட்டுநகர்கள் மற்றும் வாகனப் பெருக்கம் இவையெல்லாவற்றையும் விட மதுவே முக்கியக் காரணம். நாளொன்றுக்கு மாநிலம் முழுவதும் 200 சாலை விபத்துகள் நடக்கின்றன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அனைத்து மகளிர் காவல்நிலையங்களில் வரதட்சனை கொடுமைகளை விட குடிபோதையில் பெண்களை துன்புறுத்தும் கணவன்மார்கள் மீதான புகார் மட்டுமே 80% பதிவாகின்றன. இந்தியாவில் மதுவினால் ஆண்டுக்கு 18 லட்சம் பலியாகின்றனர். தமிழகத்தில் 2 லட்சம் பேர் பலியாகின்றனர். உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் 11 வகையான உயிர் கொல்லி நோய்கள் மதுவினால் ஏற்படுகின்றது என உலக சுகாதார ஆய்வு நிறுவனம் அறிவிக்கிறது. மது அருந்துவதால் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக உயர்கின்றது. 7இந்த நிலை நீடித்தால் 10 ஆண்டுகளில் இதற்காக அதிகமான மருத்துவமனைகள் தேவைப்படும் அதற்காக பெரும் தொகையை செலவு செய்வது தவிர்க்க முடியாததாகும். மேலும் கல்லீரல் பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்கிறது மருத்துவ உலகம் இப்படி எண்ணற்ற இழப்புகள், அழிவுகளை விளைவிக்கும் மதுவை அரசு தடை செய்யாமல் இருப்பதற்கு காரணம் வருமானம் என்ற ஒற்றை குறிக்கோள்தான் ஆனால் தமிழக அரசு லட்டரி சீட்டை ஏன் தடை செய்தார்கள்? ஏழை எளிய மக்களை பாதிக்கிறது என்றுதானே? அதை விட பன்மடங்கு பாதிப்பை ஏற்படுத்தி சிறுவர்கள், குடும்பங்கள், இளைஞர்கள் மடிவதற்கு மதுதான் காரணமாக உள்ளது. மனித சமூகத்தின் கொள்கை நோயாக இருந்து வருவது மதுதான். இன்று மனித சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கும் ஆணிவேராக இருப்பது மதுதான்.
மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் போதை தரும் அனைத்து பொருட்களையும் அரசு தடை செய்ய வேண்டும். அரசு என்றால் மக்களை நலமாக வாழ வைக்க வேண்டும். வருமானம் மட்டுமே குறிக்கோளாக இருக்கக் கூடாது மதுவை பூரணமாக ஒழிப்பதற்கு காந்தி, இராஜாஜி, அண்ணா, காமராஜர் போன்ற தலைவர்கள் போராடினார்கள் ஆனால் இன்று வரை இந்தியாவில் மதுவை பூரணமாக ஒழிக்க முடியவில்லை. ஆனால் இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பை பூரணமாக மதுவை ஒழித்துக் கட்டியது. இன்றைய அரசும், ஆட்சியாளர்களும் இஸ்லாமிய வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டும் ஏனென்றால் இஸ்லாமிய வரலாறு என்பது காகிதத்தில் தீட்டப்பட்ட வெறும் கற்பனை சித்திரம் (UTOPIA) அல்ல, மாறாக வரலாற்றில் இஸ்லாம் என்ற கொள்கையின் அடிப்படையில் ஓர் சமூக அமைப்பை கொண்ட நீதிமிக்க ஆட்சியை நட்த்தியுள்ளது. ஆம் 1400 ஆண்டுகளுக்கு முன் அரேபிய பெருவெளியில் வாழ்ந்த மக்கள் “கண்டதே காட்சி; கொண்டதே கோலம்; மதுவே இன்பம்; மாதரே சொர்க்கம்; என்று தான்தோன்றித்தனமாக வாழ்ந்தார்கள். அந்த காலகட்டத்தை ‘அய்யாமுல் ஜாஹிலிய்யா’ என்று அழைப்பார்கள் இதை இன்னும் அழகாகச் சொன்னால் “அறியாமை இருள் மண்டியிருந்த காலம்” என்பார்கள். அதுதான் இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் வழிகாட்டுதல்களை பெறுவதற்கு முந்தைய கால கட்டம் “PRE ISLAMIC PERIOD” என்ற இஸ்லாத்திற்கு முந்தைய காலம் இக்காலத்தில் வாழ்ந்த மக்கள் குடித்து கும்மாளமடித்துக் கொண்டு வாழ்ந்தார்கள். இந்த மக்களை அந்த அறியாமையிலிருந்து வெளியேற்றி அறிவொளியின் பக்கம் கொண்டு வந்தது இஸ்லாம். தன்னுடைய வலிமையான வழிகாட்டுதல்களின் வாயிலாக இந்த மனித சமுதாயத்தை சீரழிக்கவும் மதுவுக்கு மரண அடியை தந்தது இஸ்லாம். அன்று முதல் இன்று வரை வருமானங்கள் கருதியோ, இதர புறக்காரணங்கள் கருதியோ இந்த தடையைத் தளர்த்தவில்லை இஸ்லாம். மதுவினால் ஏற்படும் தீமைகளை பற்றி இறைவனின் இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தீமைகள் அனைத்திற்கும் தாய் மதுவாகும் தீமைகளிலேயே மிகவும் வெட்கக்கேடான தீமை போதையாகும் என்றார்கள்.
நூல் : இப்னு மாஜா
ஒரு முறை இறைவனின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து கேட்டார். “இறைவனின் தூதர் அவர்களே! நாங்கள் மிகவும் குளிரான பிரதேசத்தில் வசித்து வருகின்றோம் அந்த பிரதேசத்தில் வசித்து வருகின்றோம் அந்த பிரதேசத்தில் கடினமாக உழைக்க வேண்டியதிருன்றது. குளிரிலிருந்து, உடல் சோர்விலிருந்து எங்களை விடுவிக்க மதுவைப் போன்ற பொருட்களை அருந்தலாமா?”
இதற்கு இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் “நீங்கள் அருந்த அனுமதி கேட்பவை போதையை உண்டாக்குகின்றனவா? எனக் கேட்டார்கள் அதற்கு அவர் “ஆம்” எனப் பதில் தந்தார். அப்படியானால் நீங்கள் அதை தவிர்க்க வேண்டும் என்று இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதற்கு அந்த மனிதர் “நான் இதை ஏற்றுக் கொள்வேன் அந்த குளிர் பிரதேசத்தில் வாழும் மக்கள் ஒத்துக் கொள்வார்களா? என்பதுதான் சந்தேகமாக இருக்கின்றது” என்றார் அதற்கு இறைவனின் இறுதித் தூதர்(ஸல்) அவர்கள் இப்படி தெளிவாக பதில் அளித்தார்கள்: “அப்படியானால் நீங்கள் அந்த மக்களோடு வாதிட்டு (சண்டையிட்டு) அவர்களை ஒத்துக் கொள்ளச் செய்ய வேண்டும்.
இது மட்டுமல்ல மது மருந்து வகையில் வந்தாலும் அதையும் இஸ்லாம் தடை செய்கிறது. “மதுவை தயாரிப்பது, விற்பனை செய்வது, வாங்குவது எல்லாம் பாவங்கள்” என அறிவித்தது இஸ்லாம். இன்றும், இனி வரும் காலங்களிலும் மது போன்ற சமூகத் திறமைகளை ஒழிக்கும் திறமை, கொள்கை பலம் இஸ்லாத்தில் மட்டுமே உள்ளது... ஏனென்றால் இன்றைய ஆட்சியாளர்களுக்கு எது தீமை? எது நன்மை? என்பதை பற்றிய அறிவு தெளிவைத் தரும் சரியான வழிகாட்டுதல்கள் , படிப்பினைகள் உள்ளன. இன்றைய ஆட்சியாளர்கள் இஸ்லாத்தில் படிப்பினை பெற்று செயல்படுத்த வேண்டும் வரும் காலங்களில் இன்ஷா அல்லாஹ்...380px-Kudimagan No Parking
(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (நபியே! “தர்மத்திற்காக) எதைச் செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் “(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக; நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) இவ்வாறு விவரிக்கின்றான்.
அல் குர் ஆன் 2 : 219